Coimbatore Institute of Technology Alumni 1976
- Being together brings Happiness
- Dear Batch mate,
ஆண்டிரண்டு போனால்...
இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை வரும்
எங்கள் வீட்டுத் திருவிழா - இது
வயதை மறந்து வரம்புகள் மறந்து
நாங்கள் கொண்டாடும் குடும்பப் பெருவிழா
அன்று பிரிந்தோம் அலைந்து திரிந்தோம்
குடும்பக் குழந்தையெனக் கூடி மகிழ்ந்தோம்
இளமை கடந்தோம் அனுபவம் அடைந்தோம்
நட்பே பெரிதேனும் ஞானம் படைத்தோம்
பொய்கள் இல்லை, ஒப்பனைகள் இல்லை,
நாங்கள் நாங்களாக வாழும் இரண்டு நாட்கள்
தொழிலதிபர்கள், பொறியியல் நிபுணர்கள்
என்று அறிமுகங்கள் இல்லை
மாமா, வாத்தி என்று பழைய பெயர்கள்
பழைய நினைவுகள்....திருச்சிக்கு வந்து திரும்பிச் செல்கிறோம்
இதயம் முழுவதும் நினைவுகள்
புகைப்படங்களாய்ப் பதிந்தன
ஏற்காட்டில் மீண்டும் சந்திப்போம்,
மீண்டும் மீண்டும்
இரண்டு வருடங்களைக் கடத்த
இந்த இரண்டு தினங்கள் போதும்
முகத்தில் சுருக்கங்கள் வரலாம்
நடையில் தளர்ச்சி வரலாம்
தலைமுடி இருக்கலாம்,
இருந்தாலும் நரைக்கலாம்
பிள்ளை பெண்களுக்குப்
பிள்ளைகள் பெண்கள் பிறக்கலாம்
எது இருந்தாலும் மீண்டும் சந்திக்கும் போது
76ஆம் ஆண்டு இளைஞன் மீண்டும் பிறப்பான்
சென்று வாருங்கள் இந்தப் பிரிவு
மீண்டும் சந்திக்கத்தான்.
மீண்டும் வரும் வரை புதுத்தெம்பு
இந்த சந்திப்பு தந்திடுமே
சாதிக்க நமக்கு இன்னும்
களங்கள் பல உண்டு;
உழைத்து சாதித்ததை இனி
அனுபவம் கொண்டு சாதிப்போம்;
இன்று பிரிவோம்.... மீண்டும் சந்திப்போம்....கல்லணை களங்களை வென்று நிற்கிறது,
கட்டியவன் மறைந்தாலும் அவன் பெயர் கூறி நிற்கிறது;
நம் நட்பு தொடரட்டும்,
காலத்தின் ஏடுகளில் புதிய சரித்திரம் எழுதட்டும்;
இருபத்தைந்து ஆண்டுகள்
இதயத்தில் ஊறிக் கிளைத்த விதையில்
இரண்டாண்டுகளுக் கொரு முறை
பூக்கும் டிசம்பர் பூவிது;
பூக்களைத் தேடி வண்டு வரும், வண்டோடு
அதன் பெண்டு வரும், இவர்களோடு
சிண்டுகளும் வரும் சிறப்பைப் பாருங்கள்;
வந்த அடுத்த தலைமுறை சந்தோஷமாய்
கைகோர்த்து ஆடுகிறது
எங்கள் வாழ்விலும் நட்பை மதித்து
இணைவோம் என்று காவடிச்சிந்து பாடுகிறது.வாழையடி வாழைகளே,
வயதின் அனுபவத்தில் செய்தி ஒன்று சொல்வேன்,
உலகமெல்லாம் சுற்றுங்கள்,
உங்கள் முத்திரை பதித்திடுங்கள்,
உள்ளத்தில் நினைவுகள்
உலராமல் இருக்கட்டும்,
நட்புக்கும் நீளுவதற்குக் கரங்கள்
தளராமல் இருக்கட்டும்;
திருச்சியில் திருவிழாவென திருத்தமாய் விழா
நடத்தியவர்களுக்கெல்லாம் நன்றி;
அமைதியாய் செயல் புரிந்த சுகுமார்,
பின்புலமாய்த் துணை நின்ற துணைவியார்;
நாமம் சொல்லுவேன் அது நடராஜன்தான்
பழனிக்கு சாமி பந்தமான ஆசாமி
இவரெல்லாம் சேர்ந்து செய்த சாதனை
நல்ல நினைவுகளுடன் செல்கிறோம்
பிரிவோம் மீண்டும் சந்திப்போம்S. ஜெயராமன்
